கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் காவல்துறையினர் பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டமை, இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் தமது ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவற்றில் 90 வீதமான முறைப்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய முறையாடுகள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.