யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பொங்கு தமிழ் பிரகடன நினைவுப் பலகை, தூபியாகப் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார்.
2001 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பொங்குதமிழ் நிகழ்வு நடத்தப்பட்டதுடன், இதன் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடனம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பலகையை தூபியாகப் புனரமைக்கும் பணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டிருந்த நிலையில், அவ்வாறு புனரமைக்கப்பட்ட தூபியே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையிலுள்ள 15 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் தமிழ் விழாவில், இன்று காலையில் யாழ். பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பொங்குதமிழ் தூபி திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.