ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் இன்று காலையில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sherbourne street மற்றும் Dundas street பகுதியில் இன்று முற்பகல் 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது குறித்த அந்த பெண்ணின் உடலின் மேற்பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட கத்திக் குத்துக் காயம் ஏற்பட்டதனையும், அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதனையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்தினச் சென்றடைந்த வேளையில், குறித்த அந்தப் பெண் சுவாசித்தவாறும் சுயநினைவுடனும் காணப்பட்டதாகவும், மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கத்திக் குத்தினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபரும் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் என்றும், அவர் சுமார் ஐந்து அடி நான்கு அங்குல உயரமுடையவர் என்றும் அடையாளம் வெளியிட்டுள்ள காவல்துறையினர், (ஷேர்போர்ன்)Sherbourne Streetஇல் தெற்கு நோக்கி தப்பிச் சென்றுள்ள அவரைக் காணுற்றோர் தமக்கு தகவல் வடங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.