பசுபிக்கின் தென் பகுதியில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
பசுபிக்கின் ரிங் ஆஃப் பயர் பகுதியிலேயே இந்த பிஜி தீவு அமைந்துள்ளதன் காரணமாக, கண்டப் பெருந்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் பகுதியாக இது கருதப்படுகிறது.
முன்னதாக பிஜி தீவில் கடந்த மாதம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.