• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Thursday, June 25, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை

எங்கள் பிள்ளைகள் சாவதற்குள், அவர்களை மீட்ப்பதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

dineshpress by dineshpress
September 20, 2018
in இலங்கை, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் பிள்ளைகள் சாவதற்குள், அவர்களை மீட்டு கொடுப்பதற்கு எல்லோரையும் ஒத்துழைப்பு தருமாறும், அவர்கள் எங்களுக்கு உயிரோடு வேண்டும் என்றும், அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அரசியல் கைதியான சுலக்ஷனின் சகோதரி மோகனா, தனது அண்ணா தற்போது ஐந்தாவது முறையாகவும் உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார் என்பதையும், ஒவ்வொரு முறையும் உணவுப் புறக்கணிப்புப்போராட்டத்தை முன்னெடுக்கும் போதும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவை இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு ஐந்து முறை கடந்த நிலையிலேயே தற்போது இந்தப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள் எனவும், அவர்களது உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது என்றும், எனவே அவர்களுக்கு விடுதலை அல்லது குறுகிய கால புணர்வாழ்வளித்து விடுதலை செய்யவேண்டும் எனவும், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதியான கோமகன் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளுடைய வழக்குகளானது தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எதுவித ஆதாரங்களும் இல்லை எனவும், வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை அடிப்படையாகக் கொண்டே வழக்குகளை தாக்குதல் செய்துள்ளார்கள் என்றும் விபரித்துள்ளார்.

இந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலமும் அவர்களால் சுயமாக வழங்கப்படவில்லை எனவும், மாறாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினுடைய வற்புறுத்தலின் அடிப்படையிலேயே அச்சத்தின் காரணமாக வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் தமது வழக்குகளை விசாரணை செய்வதற்காக சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டபோதும், தற்போது அங்கு அரசியல் கைதிகளின் வழக்குகள் விசாரிப்பதற்கு பதிலாக வேறு வழக்குகளே விசாரணை செய்யப்பட்டு வருவதுடன், மீண்டும் அரசியல் கைதிகளின் வழக்குகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளன எனவும், அத்துடன் தமது வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகளும் தம்முடைய சார்பாக முன்னிலையாவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலத் தவணைகளும் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றன எனவும், இந்த நிலையிலேயே அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அந்த அரசியல் கைதிகளே கடந்த ஐந்து தடவைகள் உணவுப் புறக்கணிப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும் அந்த ஐந்து தடவைகளும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளும் மீண்டும் உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள் எனவும், இவ்வாறான நிலையில் அந்த அரசியல் கைதிகளின் விடுதலையை முதன்மைப்படுத்தி, அதற்கான ஆக்கபூர்வமான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு யாழ். பல்கலைக்கழக சமூகம், தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியோர் முன்வரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Next Post

வடகொரியா அணுவாயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேரப்பேச்சுகள் 2021ஆம் ஆண்டு சனவரி மாதத்திற்குள் நிறைவுபெறும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது

Related Posts

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இலங்கை

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசியல்

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன
அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன

June 24, 2024
Next Post

வடகொரியா அணுவாயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேரப்பேச்சுகள் 2021ஆம் ஆண்டு சனவரி மாதத்திற்குள் நிறைவுபெறும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In