அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் பெண் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 3பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 3 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட குறித்த பெண், பின்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக அந்த மாநிலக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் 26 வயதான Snochia Moseley என்று இனம் காணப்பட்ட போதிலும், இந்த தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.