அமெரிக்காவில் உளவு பார்த்ததாக சீன நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சீனாவை சேர்ந்த ஒருவர் அமெரிக்க பொறியாளர்கள் மற்றும்
விஞ்ஞானிகளை சீனாவின் சார்பில் உளவுப் பார்த்ததாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 வயதாகும் ஜு ஷாக்குவான் சட்ட விரோத உளவாளியாக செயல்பட்டதாகவும், அவர் சிகாகோவில் வைத்து கைது செய்யப்பட்டார் என்றும் அமெரிக்க சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் மின் பொறியியல் படிப்பதற்காக 2013ஆம் ஆண்டு அமெரிக்கா வந்துள்ளதுடன், சிகாகோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
பின்னர் 2016ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் சேர்வதற்கும் அவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தற்போது விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை அமெரிக்க குடிமக்கள் அல்லாதோர்கள் இராணுவத்தில் சேர்வதற்கு வழிவகுக்கும் ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் அவர் இராணுவத்தில் சேர விண்ணப்பித்திருந்ததாகவும், அதன்படி தான் கடந்த ஏழு ஆண்டுகளாக எந்த வெளிநாட்டு அரசுடனும் தொடர்பு வைத்திருக்கவில்லை என்றும் குறித்த அந்த நபர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பின்னர் உளவுத்துறை அதிகாரியுடன் தனக்கிருக்கும் தொடர்பு குறித்த அமெரிக்க இராணுவ அதிகாரியின் கேள்விக்கு அவர் பதில் கூறுவதற்கு அவர் தவறிவிட்டார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





