இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல்துறை தலைவர் மெங் ஹாங்வே காணாமல் போன நிலையில், அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்துலக காவல்துறை தலைவர் மெங் ஹாங்வே கடந்த செப்டெம்பர் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோது காணாமல் போன நிலையில் , அவர் சீன அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
எனினும் எதற்காக அவரிடம் விசாரணை நடைபெறுகிறது, எந்த இடத்தில் விசாரணை நடைபெறுகிறது என்ற எந்த விவரத்தையும் சீன அரசு வெளியிடவில்லை.
மெங் ஹாங்வே சீனாவைச் சேர்ந்தவர் என்பதுடன், அந்த நாட்டின் துணை அமைச்சராக ஏற்கெனவே பதவி வகித்தவர்.
இந்த நிலையில் உள்நாட்டு பிரச்சினைக்காக அவர் கைது செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என அனைத்துலக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அனைத்துலக காவல்துறை தலைவரை தடுப்பக்காவலில் வைத்த விவரத்தை சீனா வெளியே செல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக அனைத்துலக காவல்துறை அதிகாரிகள் சீன அரசை தொடர்பு கொண்டுள்ளனர்.