ஆப்கானிஸ்தான் வறட்சியின் பாதிப்பைக் கடுமையாக எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு நிலவும் மோசமான வறட்சி அங்குள்ள பலரின் வாழ்க்கையை, அவர்களின் எதிர்காலத்தை மிக மோசமாக சிதைத்திருக்கிறது என்றும், குறிப்பாக பலரை இடம்பெயரச் செய்துள்ளதுடன், இடம்பெயர்ந்த மக்களிடையே பெரும் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையேயான யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்களைவிட வறட்சியின் காரணமாக தங்களின் வசிப்பிடங்களைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் அதிகம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.