கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியானதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
கொலம்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பாரம்கேபர்மேஜா நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் 9 சடலங்களை மீட்டுள்ளதுடன், அவற்றில் 5 சடலங்கள் சிறுவர்களது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பலர் இந்த நிலச்சரிவில் காணாமல் போயுள்ள நிலையில் தேடி மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில் ஏற்பட்ட கனமழை காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதில் ஏராளமான வீடுகள் புதைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு கனமழை காரணமாக கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.