தென் கொரியா நாட்டின் மிக உயரிய சியோல் அமைதி விருதுக்கு இந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா அனைத்துலக பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்காக அவர் குறித்த விருதுக்கு தேர்தெடுக்கபட்டுள்ளார்.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளால் தூய்மையான அரசை உருவாக்கியதற்காகவும் உலக நாடுகளுடன் நட்புறவை பாராட்டி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக சியோல் அமைதி பரிசு குழு தெரிவித்துள்ளது.
சமூகப் பொருளாதார அமைப்பில் மாற்றத்தை உண்டாக்கி பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு உதவியாக மோடி அரசின் கொள்கைகள் அமைந்துள்ளதாகவும் அந்த குழு குறிப்பிடப்பட்டுள்ளது.