நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 125 பேர் கையொப்பமிட்டு, தன்னிடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர் என்று சபாநாயகர் கருஜயசூரிய, சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஆகையால் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கரு ஜயசூரிய அறிவுறுத்தியுள்ளார்.
எனினும் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு கூடும் நாளிலிருந்து 10 நாட்களுக்குத் தான் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், அதில் எவ்விதமான பெரிய பிரச்சினைகளும் இல்லை என்றும் அரசாங்கத்தின் பேச்சாளர்களில் ஒருவரான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நாடாளுமன்றம் எதிர்வரும் 16ஆம் நாள்க்கு முன்னர் கூடாது என்றும் கூறியுள்ளார்.