ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் அமெரிக்கா விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, அந்த நாட்டிடம் இருந்து நவம்பர் மாதம் 4ஆம் நாளிற்கு பின்னர் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்திருந்தது.
இந்த நிலையில், ஈரான் நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா, யப்பான், தென்கொரியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் வெளியுறவு துறை செயலர் மைக் பாம்பியோ கூறுகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள 8 நாடுகளுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்படுகின்றது என்று கூறியுள்ளார்.
அந்த நாடுகள் குறித்த விபரம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும் அமெரிக்க தடைக்கு பின்னர் குறைந்தளவான கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கே அனுமதி வழங்கப்படும் என்றும் அமெரிக்காவின் வெளியுறவு துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.