வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மனு உச்சநீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனை பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை இரத்து செய்யுமாறு கோரி சி.வி.விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, மூர்த்து பெர்ணான்டோ ஆகியோர் கொண்ட குழு முன்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, குறித்த மனுவை நிராகரிப்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.