முதலாம் உலகப் போரில் மரணித்த கனேடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று சனிக்கிழமை பிரான்சின் விம்மி றிட்ஜ்ற்கு(Vimy Ridge) பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலாம் உலகப் போரின் நிறைவின் நூறாவது ஆண்டைக் குறிக்கும் வகையில் பிரான்சில் நடைபெறும் நினைவு நிகழ்வுகளில் நாளை ஞாயிற்றக்கிழமை உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் நிலையில், இன்று பிரதமர் விம்மி றிட்ஜ் போர் நினைவகத்திற்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டும் முதலாம் உலகப் போரின் நூற்றாண்டை ஒட்டி அங்கு சென்றிருந்த பிரதமர், இந்த ஆண்டு உலகப் போரின் நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில நாளை கலந்து கொள்ளவுள்ளார்.
முதலாம் உலகப் போரின் போது, 1914ஆம் ஆண்டுக்கும் 1918ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 65,000 கனேடிய வீரர்கள் மரணித்துள்ளதுடன், அவர்களில் ஏறக்குறைய 10,500 பேர் விம்மி றிட்ஜ்ஜில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.