ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக அந்த நாட்டின் பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த செயல்திட்ட உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் 5 மணிநேர விவாதத்துக்கு பின்னர் இந்த இறுதி முடிவு எட்டப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் தெரசா மே தயாரித்த செயல்திட்ட அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தெரசா மே வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது அறிவுப்பூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் சிந்தித்து ஒட்டுமொத்த பிரித்தானிய நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.