குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் மைத்திரிபால சிறிசேனவே இருப்பதாக ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
இடமாற்றப்பட்டுள்ள நிஷாந்த சில்வா குற்றப்புலனாய்வு பிரிவின் திறமையான அதிகாரியொருவர் எனவும், அவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட அதிகாரியெனவும் தெரிவித்துள்ள ஹிருணிகா, தற்போது சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு சனாதிபதியின் பொறுப்பின் கீழேயே இருப்பதால் இந்த இடமாற்றம் கண்டிப்பாக சனாதிபதியின் ஆணைக்கமையவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதுவரை நடைபெற்ற அனைத்து சம்பவங்களும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பின் கீழேயே நடைபெற்றனவென்றும், அவரால் அதன் பொறுப்புகளை வேறொருவரிடம் திணிக்க முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர தெரிவித்துள்ளார்.
இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே இதனைத் தெரிவித்துளள அவர், பொதுபல சேனா அமைப்பின் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு தெரியாதென சனாதிபதி தெரிவித்துள்ளதாகவும், இவரிடம் இருக்கும் பழக்கம், பந்தை மற்றையவரிடம் மாற்றுவது என்றும், ஆனால் சனாதிபதியால் இப்போது அதனைச் செய்ய முடியாது என்றும், காரணம் சனாதிபதியின் பொறுப்பிலேயே காவல்துறை இயங்குகின்றது என்றும் அவர் விபரித்துள்ளார்.