கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் 15,000 கோடி ரூபா நிதியை தமிழக அரசு கோரியுள்ளது.
தமிழக முதல்வர் பழனிச்சாமி இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் நேரில் சென்று சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு விபரம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்களை பிரதமரிடம் எடுத்துக் கூறி, புயல் நிவாரணமாக 15000 கோடி ரூபா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, சேத விவரங்களை உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுததியதாகவும், அதற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்புவதாக தலைமை அமைச்சர் கூறியுள்ளதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், 63 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தமிழக முதல்வர் பழனிச்சாமி மேலும் விபரம் வெளியிட்டுள்ளார்.