32 விண்வெளித் திட்டங்கள் அடுத்த ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘ஈஸ்ரோ’வின் தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் சிறிஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிசாட்-7ஏ செயற்கைக் கோல் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்பு அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இந்த விபரத்தை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் நேற்றைய நாள் ஏவப்பட்டுள்ள ஜிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக
குறித்த புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஈஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார்.
35 நாளில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள 3-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இது என்றும், செயற்கைக்கோளின் சுற்று வட்டப்பாதையை உயர்த்தும் பணி வியாழக்கிழமை காலை மேற்கொள்ளப்படும் எனவும் ஈஸ்ரோ’வின் தலைவர் சிவன் தகவல் வெளியிட்டுள்ளார்.