தமிழ் மரபுரிமைத் திங்கள்
பகுதி 1: வாழ்வுரிமை இயக்கங்களை தொலைத்துவிட்டு அரசியல் கட்சிகளுக்குள் அடிமைப்பட்டு முக்குளிக்கும் உலகத்தமிழினம்!
உலகலாவிய தமிழினம் இன்று இனரீதியாக ஒரு நெருக்கடிக்குள் கள்ளப்பட்டிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மையாகும். அதை உணர்ந்து கொள்ளாதோர் இனத்தில் பெரும் பகுதியினர். இன்னொரு பகுதியினர் பழம்பெருமை பேசியே காலத்தை கடத்துகின்றனர். இன்னும் சிலர் அதை உணர்ந்தாலும் இதில் இருந்து இனத்தை மீட்டெடுப்பதற்கான நடைமுறையான முன்னெடுப்புக்கள் அல்லது மார்க்கம் எதுவுமின்றி வெறும் முழக்கங்களை மட்டும் எழுப்பி வருகின்றனர். இந்நிலைக்கான பிரதான காரணத்தை அடையாளம் கண்டு அதில் இருந்தான தீர்வுகள் முன்னெடுக்கும் முறைமை இதுவரை எழவில்லை.
இங்கு தான் வாழ்வுரிமை இயக்கங்கள் முதன்மை பெறுகின்றன. இவ்வாறு உருவான இயக்கங்களும் அக்காலப்பகுதியில் இருந்த பிரதான தாக்கங்களை எதிர் கொள்வதில் அதீத கவனத்தை செலுத்தினவேயன்றி, அடிப்படை தவறை அடையாளம் கண்டு, களைய முற்படவில்லை. இதில் திராவிட இயக்த்தை முதன்மையக சொல்லலாம். இதில் மாற்றான சிந்தனையுடனும், செயற்பாடுகளுடனும், அதனை நிசத்தில் செய்து காட்டிய முறைமை, எனப் பலவழிகளில், முறையான ஒரு வாழ்வுரிமை தமிழ்இயக்கத்தின் தந்தையாக, பிரபாகரன் தமிழர் மனங்களில் திகழ்கிறார். ஆனால் அவர் எண்ணக்கருக்களும், முன்னெடுப்புக்களும், கூட இன்றைய தமிழினத்தால் சரியான புரிதலுக்கு உட்படாத பேரவலம் இன்று நடந்தேறுகின்றது.
இந்த இடைவெளியில் தான், மீண்டும் அரசியல் கட்சிகளின் பெருகலும், ஆதிக்கங்களும், அவற்றை நோக்கிய பார்வையும், அடிமைப்படுதலும், தமிழினத்தை ஆட்கொண்டு நிற்கிறது. இதில் பலிகடாவாக்கப்பட்டிருப்பது தமிழ்த் தேசியம். இந்நிலை தாய்த் தமிழகம் ஆக இருந்தாலும் சரி, ஈழமாக இருந்தாலும் சரி, அல்லது தமிழர் புலம்பெயர் வாழ்வாக இருந்தாலும் சரி, எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. எங்கும் ஒரு வாழ்வுரிமை இயக்கத்தையும், இனம் சார்ந்து காணவில்லை. ஆனால் அனைத்து இடங்களிலும் அரசியல் கட்சிகள், கட்டுமானங்கள், அமைப்புக்கள், என நாளும் பல்கிப் பெருகியே வருகின்றன. அவற்றின் வளர்ச்சி நலிந்து போயிருக்கும் தமிழினத்தை, மேலும் பலகூறுகளாக்கி, தனக்குள்ளேயே பொருத வழிகோலுவது மட்டுமன்றி, ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழனையே, எதிரியாக்கியுள்ளது.
இவற்றிற்கான அந்த அடிப்டைக் காரணம் என்ன? கடாரம் வென்ற தமிழன், கப்பலோட்டிய தமிழன், உலக வாணிபம் செய்த தமிழன், மூத்த மொழியின் சொந்தக்காரன் தமிழன், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழன், இயல் இசை நாடகம் என முக்கலையின் பரிமாணம் தமிழன், எனப் பல பழம்பெருமைகளின் வழித்தோன்றல் இன்று, வழியையே தொலைத்துவிட்டு, அம்மணமாக நிற்பதன் மர்மம் என்ன? யானைக்கும் அடிசறுக்கும் என்போம், அவ்வாறு அடி சறுக்கி அடிமைப்பட்டபோது, வீழ்ந்த வீழ்ச்சியில் இருந்து நாம் இன்னும் எழவில்லை என்பதே அர்த்தம்.
அடிமைப்பட்டபோது என்னும் போது, பலரும் ஒல்லாந்தர், போத்துக்கீயர், ஆங்கிலேயர் என ஆரம்பித்துவிடுவர். அது தான் பெரும் தவறு. அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளின் முன்னரே, இவ்வாறான அடிமைப்படுத்தலுக்கு நான் ஆட்பட்டிருக்கின்றோம். அதனாலான இடப்பெயர்வுகளையும், இடைச்செருகல்களையும், நாம் தொடர்ந்தும் கண்டிருக்கின்றோம். இதனால் எமது வாழ்வும், வளமும், நிறையவே மாற்றங்களை நோக்கி, வலோத்காரமாக தள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறான மாற்றங்கள், எம்மை அடிமைப்படுத்தியவர்கள் எம்மை இலகுவாக கையாள்வதற்காக, எம்மீது திணித்த விடயங்கள். ஒரு அடிமை வாழ்வில் இருந்து மீண்டபோது, இவ்வாறு திணிக்கப்பட்டவற்றை அடையாளம் கண்டு, புறம்தள்ளுவதற்கு பதிலாக, அக்குறைபாடுகளை தாங்கியவாறே அடுத்தவருக்கு அடிமைப்பட்டு, மேலும் குறைபாடுகளை தொடர்ந்தும் சேர்த்துக் கொண்டோம்.
இதனால் இனமான உணர்ச்சி, மொழியுணர்வு, புலனாய்வு, தலைமைத்துவ பண்புகள், ஒற்றுமை, பகுத்தாய்வு, கட்டுமானங்கள் என அனைத்தையும் மீட்டெடுக்கமுடியாமல், சிதைந்துகிடக்கின்றோம். இன்று அந்த அடிமை விசுவாதம், இன்றும் பெருவளர்ச்சி கண்டு நிற்கிறது. உலகப் பெருநிறுவனங்களில் தமிழன் எங்கும் முக்கிய பதவிகளில் பரவிக் கிடக்கிறான். தமது அடிமை அரசியலை முண்னெடுக்கும் கருவியாக, தமிழனையே தமிழனுக்கு எதிராக, எங்கும் பயன்படுத்துகின்றார்கள். தமிழினத்தலைமை சொல்வது போல நாங்கள் என்றும் எல்லோருக்கும் நம்பிக்கையான அடிமை செவகர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றோம்.
மகாவம்சம் பொய், திணிப்பு என்கிறோம். மணிமேகலையையும், குண்டலகேசியையும், தொலைத்துவிட்டு, மகாபாரதத்திற்குள்ளும், இராமாயணத்திற்குள்ளும் புதையுண்டு கிடக்கின்றோம். ஆனால் எமது தொன்மையை, அகழும், ஆய்வுக்குட்படுத்தும், ஆவணப்படுத்தும், உலகளாவிய தமிழ் ஆய்வுமையம் எங்கே? ஆதாரரீதியாக தமிழினத்தின் தொன்மையை, அதன் ஆதாரத் தடயங்களை கண்டறியும், பேணிப்பாதுகாக்கும் முறைமை எங்களிடம் எங்கிருக்கிறது? அதற்காக ;என்ன செய்தோம்? சமீபத்தில் தமிழினத்தின் புதிய புறநாநூறாக, அமைந்த ஈழவிடுதலை வீரவரலாற்றின் ஆவணங்களே, தொலைந்து அழிந்துபோகும் நிலை இன்று. அதனைக் காப்பதற்கே எம்மிடம் வழியில்லை, என்பது இன்றைய எமது இழிநிலையின் பட்டவார்தனமான காட்சி.
எம்மை அடிமைப்படுத்தியவர்கள், எம்மை அடக்கியாழ எம்மை பிரித்து மோதவிட எம்மில் விதைத்த சாதிகள், முறைமை எம்மை தொடர்ந்தும் கூறுபோட, இன்று அரசியல் கட்சிகளாக எம்முன் வலம்வருகின்றன. மதரீதியாக எம்மை அடிமைகொள்ள திணிக்கப்பட்ட, அவர்கள் சமஸ்கிருதத்தை எம்மால் இன்றுவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவர்கள் திணித்த கடவுள்கள், அனைவரையும் தமிழ் கடவுள்களாக வரிந்து கொண்டுள்ளோம். இவ்வாறு மதரீதியாக அடிமைப்படுத்தி, அதனை அரசியல் இயக்கமாகவும் மாற்றி, எம்மை அடிமை கொண்டவர்களை எதிர்கொள்ளவெனப் புறப்பட்ட்வர்கள், இடைச்செருகல்களை களைவதற்குப் பதிலாக, தமிழர்களிடம் இருந்த பக்திமார்க்கத்தையே, போட்டுத் தள்ளியமை அணுகுமுறை தவறாக மாறிப்Nhபானது.
அதிக அரசியல் கட்சிகள், அதிக தலைவர்கள், அதிக கடவுள்கள், அதிக கோவில்கள், அதிக பத்திரிகைகள், அதிக வானொலிகள், அதிக தொலைக்காட்சிகள் என தமிழர் வரலாறு சிதைந்துகிடக்கிறது. இவ்வாறு எம்மில் கடைபரப்புபவர்களில் அரைவாசிப் பேர் எம்மினத்தவரே கிடையாது, என்பது வேறு பெரும் துன்பம். ஆனால் இதைப் எம்மில் பலரும் வளர்ச்சி என்பது தான் பேரவலம். ஒரு முறை கனடியத் தலைவர் ஒருவர் என்னிடம் சொன்னார் எம்மிடமே தேசியப்பத்திரிகைகள் தேசியத்தொலைக்காட்சிகள் என சிலவே உள்ளன. ஆனால் எங்களைவிட உங்களிடம் பலமடங்கு இருக்கிறது என்றார். ஒருமுறை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். பலதாக உள்ள ஒவ்வொரு இடங்களிலும், ஒரு ஆழுமையுள்ளவரும், அவருக்கு சேவகம் செய்யும் அடிமையாளர்கள் பலரும் உள்ளனர். இதில் ஒவ்வொரு துறை சார்ந்தும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள அந்த ஒரு அழுமையாளர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டால், அதால் உருவாகும் ஆளுமையாளர்களில் சே;ர்க்கை எம்மை இனமாக எவ்வித வலுநிலைக்குக் கொண்டு செல்லும். அந்தக் காட்சியை ஒருமுறை உங்கள் மனக்கண்ணின் முன்னால் கொண்டு வந்து பாருங்கள்.
தமது அடையாளத்தையும், இருப்பையும், அடையாளம் கண்டு உறுதிசெய்து கொள்ளும் அதேவேளை, காலமாற்றத்திற்கேற்ப மாற்றங்களை நோக்கிய உரிய நேரிய மாற்றங்களையும் தமிழினம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும். சரியான அடித்தளம் இடப்படாமல் எழுப்பப்படும் எவ்வித கட்டிடமும், எத்தனை அடுக்கும், நீண்டு நிலைக்கப் பொவதில்லை என்பது தான் வரலாறு. இங்கும் பெருமை மிகு பாட்டன் சோழன் தான் நினைவுக்கு வருகி;றான். உலக அதிசயங்களில் ஒன்றான தஞ்சைப் பெரும் கோவில் 1100 ஆண்டுகளாகியும் ஒரு சிறிய அசைவுமின்றி அப்படியே இருக்கிறது. 1இலட்சத்து 10ஆயிரம் தொன்கள் கிரைனேட்டை தாங்கியவாறே அதிசயமாக நிற்கிறது. அடித்தளம் சரியில்லாமல் சாய்ந்த கோபுரத்தை அதிசயமாக பார்க்கும் உலகிற்கு எமது அதிசயத்தை பேசும் திறாணியற்றவர்களாகவே நாம் இருக்கின்றோம். அவ்வாறான அடித்தளமே எமது இனத்தின் உயர்விற்கு இன்று தேவை! அவ்வாறானால் இங்கு தான் ஓரு பெரும் கேள்வி எம்மனைவருக்கும் முன்னால் எழுகிறது? சரியான ஆழமான வலுவான ஆட்டம் காணாத அடித்தளத்தை இடுவதானால் எவ்விடயங்களில் எல்லாம் அதீத கவனம் செலுத்தப்பட்டாக வேண்டும்? எம்மைச் சிதைக்கும் நீண்டு நீடித்து நிலைக்கும் அவ்விடைச் செருகல்கள் தான் என்ன? ஒரு வாழ்வுரிமை இயக்கத்தை நோக்கிய உங்கள் கருத்துக்களை இருகரம் நோக்கி வரவேற்கின்றேன்? வெறும் பார்வையாளர்களாக இருப்பதால் தான் எம்மை அனைவரும் பந்தாடுகின்றனர். ஆகவே பங்காளர்களாhக கருத்துக்களுடன் வாருங்கள் ஆரோக்கியமாக விவாதிப்போம்! இது தமிழ் மரபுரிமைத்திங்கள் நாட்கள். பேச விவாதிக்க நிறைய இருக்கிறது… ஆரம்பித்து வையுங்கள்….Nehru Gunaratnam