• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Friday, May 1, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home காணொளிகள்

நிலவில் தாவரம் முளைத்தது – வரலாற்றில் முதல் முறை

dineshpress by dineshpress
January 16, 2019
in காணொளிகள், சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சீனாவின் சாங்’இ4 ரோபோட்டிக் ஆய்வு விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட விதைகள் முளைத்துள்ளன என்று சீனாவின் தேசிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது.

நிலவில் உயிரின வளர்ச்சி முதன் முறையாகக் காணப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் நீண்டகால நோக்கில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.

சாங்’இ4 நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கியபின் மேற்கொள்ளப் பட்டிருக்கும் முதலாவது ஆராய்ச்சி முயற்சியாகும் இது. பூமியை நோக்கியே இருக்கும் நிலவின் பக்கத்தில் அல்லாமல், மறுபுறத்தில் இருளாக இருக்கும் பகுதியில் இந்த விண்கலம் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறது.

ஜனவரி 3 ஆம் தேதி தரையிறங்கிய இந்த விண்கலத்தில், அந்தப் பகுதியில் உள்ள நிலவின் மண்ணை ஆய்வு செய்வதற்கான கருவிகள் உள்ளன.

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் முன்பு தாவரங்கள் வளர்க்கப் பட்டிருக்கின்றன. ஆனால் நிலவில் ஒருபோதும் இது நடந்தது கிடையாது.

நிலவில் தாவரங்களை வளர்க்கும் திறன் இருப்பது, நீண்டகால விண்வெளித் திட்டங்களுடன் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு உதவும். இரண்டரை ஆண்டு காலம் பிடிக்கும், செவ்வாய் கிரகப் பயணம் போன்ற, விண்வெளித் திட்டத்துடன் இணைந்ததாக இது இருக்கும்.

விண்வெளி வீரர்கள் உணவுத் தேவைக்காக பூமிக்கு திரும்பி வருவதற்கான தேவை இல்லாமல், விண்வெளியிலேயே தங்களுக்கான உணவை அறுவடை செய்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.நிலவில் தரையிறங்கியுள்ள சீனாவின் விண்கலத்தில் பருத்தி, உருளைக்கிழங்கு விதைகள், ஈஸ்ட் மற்றும் பழ ஈக்களின் முட்டைகள் ஆகியவை கொண்ட மண்ணும் வைக்கப்பட்டுள்ளது.

விண்கலத்தில் சீலிட்ட கண்டெய்னரில் தாவரங்கள் வைக்கப் பட்டுள்ளன. இந்தப் பயிர்கள் ஒரு சிறிய உயிரி மண்டலத்தை – ஒரு செயற்கையான, தற்சார்பு சூழலை உருவாக்குவதாக இருக்கும்.

பருத்தி விதைகள் முளைவிட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

முளைப்பு விட்டுள்ள விதையின் படத்துடன் ஒரு செய்தியை, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான பீப்பிள்ஸ் டெய்லி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. “நிலவில் மனிதகுலத்தின் முதலாவது உயிரின பரிசோதனை நிறைவு பெறுகிறது” என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த முன்னேற்றம் “நல்ல செய்தி” என்று ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் விண்வெளி வீரர் பிரெட் வாட்சன் பி.பி.சி.-யிடம் தெரிவித்தார்.

“நிலவில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தங்களுக்கான பயிர்களை எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் வளர்ப்பதில், சமாளிக்க முடியாத பிரச்சினைகள் எதுவும் இருக்காது என்பதை இது காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

“விண்வெளிப் பயணங்களில் நின்று செல்லும் இடமாக நிலவை பயன்படுத்துவதில், குறிப்பாக செவ்வாய் கிரகதத்துக்கான பயணங்களில் இவ்வாறு பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒப்பீட்டளவில் இது பூமிக்கு நெருக்கமாக உள்ளது” என்று வாட்சன் தெரிவித்தார். “எதிர்காலத்தில் விண்வெளியில் மனிதர்கள் உயிர்வாழ்வது பற்றிய சிந்தனைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்று தென் சீன மார்னிங் போஸ்ட் – க்கு இந்த ஆராய்ச்சியின் முதன்மை வடிவமைப்பாளரான பேராசிரியர் ஜி ஜெங்சின் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமைCLEP
Image caption
நிலவில் தரையிறங்கிய பிறகு சாங்’இ4 விண்கலத்தில் உள்ள விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
“புவியீர்ப்பு விசை குறைந்த சூழ்நிலையில் இந்தத் தாவரங்கள் வளர்வது பற்றி அறிவதன் மூலம், விண்வெளி தளத்தை எதிர்காலத்தில் அமைப்பதற்கு அடித்தளம் உருவாக்குவதில் திட்டமிட முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

பருத்தியை ஆடை தேவைக்கும், உருளைக் கிழங்குகளை விண்வெளி வீரர்களின் உணவு தேவைக்கும், கடுகு எண்ணெய் விதைகள் எண்ணெய் தேவைக்கும் பயன்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

பூமியில் இருந்து நிலவுக்குச் செல்வதற்கான 20 நாள் பயணத்தில் “உயிரியல் தொழில்நுட்பம்” மூலம் இந்த விதைகள் செயலற்ற நிலையில் வைக்கப் பட்டிருந்தன என்று சீனாவின் ஜின்ஹூவா செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

விதைகளுக்குத் தண்ணீர் விடுவதற்கு தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து உத்தரவு அனுப்பிய பிறகு தான் அவை முளைக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் இதுவரை 170 படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பப் பட்டுள்ளதாக ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

சீனா நிலவு ஆராய்ச்சித் திட்ட (CLEP) பிரிவு, இந்த ஆராய்ச்சியில் எடுக்கப்பட்ட பல படங்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. விண்கலம் தரையிறங்கியுள்ள இடத்தின் பனோரமா காட்சிகளும், விண்கலம் தரையிறங்கிய விடியோவும் அதில் உள்ளன.

நிலவை மாசுபடுத்துமா?
-பால் ரின்கன், அறிவியல் ஆசிரியர், பிபிசி நியூஸ் இணைய தளம்
சாங்’இ4 விண்கலத்தின் குறு உயிரி மண்டல ஆராய்ச்சியானது, – உயிர்வாழும் இனங்கள் சக்தியைத் தயாரித்துக் கொள்ளக் கூடிய வகையில் – ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசம் பற்றிய ஆராய்ச்சி செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. முழு ஆராய்ச்சிகளும் 18 சென்டிமீட்டர் உயரம் கொண்ட, 3 கிலோ எடை உள்ள சிறு கொள்கலனுக்குள் நடைபெறும். இதை 28 சீன பல்கலைக்கழகங்கள் வடிவமைப்பு செய்துள்ளன.

உள்ளே இருக்கும் உயிரினங்கள் வளர்வதற்கு உதவும் வகையில் காற்று, தண்ணீர், ஊட்டச்சத்து ஆகியவை வழங்கப்படும். நிலவில் தட்பவெப்ப நிலை மைனஸ் 173 டிகிரி செல்சியஸ் மற்றும் மைனஸ் 100 டிகிரிக்கு இடையில் அல்லது அதைவிட அதிக குளிராக இருக்கும் போது, இவை வளர்வதற்கு உகந்த வெப்ப நிலையை பராமரிப்பது தான் ஒரு சவாலாக இருக்கிறது என்று சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துகளையும் விஞ்ஞானிகள் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இந்த ஆராய்ச்சிகள் நிலவில் “மாசு ஏற்படுத்தும்” வகையில் இருக்குமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இது பெரிய கவலைக்குரியது அல்ல என்று பொதுவாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அப்பல்லோ விண்வெளி வீரர்கள் நிலவில் விட்டுச் சென்றுள்ள மனிதக் கழிவுகள் சுமார் 100 மூட்டைகள் ஏற்கெனவே நிலவில் இருப்பதைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

Previous Post

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மேயின் தரப்பு தோல்வியடைந்தது.

Next Post

உயிரைத் தந்து உறுதியைக் காத்த கேணல் கிட்டு!

Related Posts

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன
அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன

June 24, 2024
நட்சத்திர விழா 2025
எம்மவர் நிகழ்வுகள்

நட்சத்திர விழா 2025

June 22, 2025
ஸ்காபரோ மருத்துவமனைகளுக்கு 26 மில்லியன் டொலர்கள் வழங்கி வைப்பு
கனடா

ஸ்காபரோ மருத்துவமனைகளுக்கு 26 மில்லியன் டொலர்கள் வழங்கி வைப்பு

June 12, 2024
Next Post

உயிரைத் தந்து உறுதியைக் காத்த கேணல் கிட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In