மன்னார் நுழைவாசலில் உள்ள சதொச வளாகத்திலுள்ள காணப்படும் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச்செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மன்னார் நீதிமன்றம் இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
140 நாட்களைக் கடந்து மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வு நடவடிக்கைகளின் போது 300 க்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் 23 எச்சங்கள் குழந்தைகள் மற்றும் சிறார்களுடையதாக இருக்கலாம் என்று சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.ராஜபக்ச தெரிவித்தார்.
இவ்வாறு மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை புளோரிடாவிற்கு “கார்பன்” பரிசோதனைக்காக எடுத்துச்செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை குறித்த குழு அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ள நிலையில், இக்குழுவி;ல் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதியொருவரையும் இணைத்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
000





