பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்குமாறு கோரிய கவனயீர்புப் போரட்டம் ஒன்று நேதன் பிலிப் சதுக்கத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
கடந்த 2017ம் ஆண்டு வொஷிங்டனில் நடைபெற்ற இந்தப் பேரணியின் மூன்றாவது ஆண்டு ஊர்வலம் இன்று ரொறண்டோவிலும் நடைபெற்றது
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இடம்பெற்ற இப்பேரணி குயீன்ஸ் பார்க்கில் நிறைவு பெற்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்காக குரல் கொடுக்கும் நோக்கில் பேரணியாக திரண்டனர்.