ஆதார் அட்டையைப் பயன்படுத்தி நேபாளத்திற்கும், பூட்டானுக்கும் பயணிக்கலாம் என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவை 15 க்கு உட்பட்டவர்களும் அகவை 65 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆதாரைப் பயன்படுத்தி இதுவரை நேபாளத்திற்கும், பூட்டானுக்கும் பயணிக்க அனுமதிக்கப்படாமல் இருந்த வந்த நிலையில், தற்சமயம் அனைத்து அகவை உடையோரும் வீசா இன்றி பயணிக்கலாம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்ப்பட்டுள்ளது.
உரிய கடவுச் சீட்டு, போட்டோவுடனான அடையாள அட்டை அல்லது வாக்காளர் அட்டை வைத்திருக்கும் இந்தியர்கள் வீசா இன்றி நேபாளுக்கும், பூட்டானுக்கும் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
எனினும் முன்பு 15 அகவைக்குட்பட்டவர்களும், 65 அகவைக்கு மேற்பட்டவர்களும் ஒட்டுநர் உரிமம், மத்திய அரசு சுகாதார சேவை அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை அடையாளமாக பயன்படுத்த வேண்டியிருந்தது.
ஆனால் ஆதார் அட்டை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தற்போது ஆதாரும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.