எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்.டி.பி. கட்சியின் முன்னாள் தலைவர் ரொம் முல்கேயர் (வுழஅ ஆரடஉயசை) அறிவித்துள்ளார்.
என்.டி.பி கட்சியின் சார்பில் கடந்த தடவை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீளவும் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக குபெக்கைச் சேர்ந்த தமது சக உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தம்மிடம் கூறியள்ளதாக முல்கேயர் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளமை கட்சிக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
கட்சியின் புதிய தலைவர் ஜக்மீட் சிங்கின் தலைமையின் கீழ் தாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சில தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.