பனி படர்ந்த காலநிலையினால் நயாகரா நீர் வீழ்ச்சியை அண்டிய பகுதிகள் பனப்பாறைகளாக உருமாறிக் காட்சியளிக்கின்றன.
கனடாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் மகிவும் கடுமையான குளிருடனான காலநிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீர்வீழ்ச்சியை அண்டிய பகுதிகள் அனைத்தும் உறைந்து போய் பனிப் பாறைகளாக காட்சியளிப்பதாகவும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இந்தப் பகுதி நோக்கிப் படையெடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நயகரா நீர்வீழ்ச்சியின் நீர் பனிக்கட்டிகளாக மாறாவிட்டாலும், வழமைக்கு மாறாக மெதுவாகவே நீரின் ஓட்டம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நயகரா நீர் வீழ்ச்சி உறைபனியாக மாறியுள்ளது என தங்களது டுவிட்டர் பக்கங்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
உண்மையில் நீர் வீழ்;ச்சியின் நீர் உறை பனியாக மாறவில்லை எனினும், அதனை அண்டிய பகுதிகள் முழுவதும் உறை பனியாக மாற்றமடைந்துள்ளது.