மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கின்றோமே தவிர ஹிந்தி மொழிக்கு நாம் எதிரிகள் அல்லவென திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இடம்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.
தமிழ் மொழியை பாதுகாக்கும் விடயத்தில் பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம் என்று குறிப்பிட்ட அவர், அந்தவகையில் உலகத்திலுள்ள எந்த நாட்டிலும் இந்தியாவை போன்ற மொழிக்கான போராட்டம் நடைபெற்றிருக்காது என்று சுட்டிக்காட்டினார்.
இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்கள் காலம் தொடங்கி தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியிலும், இந்தி மொழி தமிழர்களிடத்தில் திணிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் இந்தி மொழியின் ஆதிக்கத்துக்கு வழிவிடாமல் நாம் நிமிர்ந்து நிற்கின்றோம் என்ற ஸ்டாலின் கூறினார்.