அமெரிக்க இராஜதந்திரிகளுக்கோ அல்லது வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் கெய்டோவிற்கோ அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் மோசமான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வெள்ளை மாளிகை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டால் அது சட்டம் ஒழுங்கை மிகவும் மோசமாக பாதிக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் வெனிசுவேலாவின் அரசுத் தலைவர் நிகொலஸ் மடுறோவிற்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட 21 நாடுகள் ஜூவான் கெய்டோவை வெனிசுலாவின் அரச தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவில் உள்ள அமெரிக்க ராஜாதந்திரிகள் மீதோ அல்லது எதிர்க்கட்சித் லைவர் ஜூவான் கெய்டோ மீதோ அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒ ஸ்திரேலியா ஜூவான் கெய்டோவை இடைக்காலத் தலைவராக ஏற்றுக் கொள்வதா அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஆயசளைந Pயலநெ அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அமெரி;க்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ வரவேற்றுள்ளார்.