சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடிய பிரஜைகளை அரசாங்கம் விரைவில் விடுதலை செய்யும் என்று சர்வதேச அனர்த்தக்குழு) நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சீனாவில் கைது செய்யப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் ராஜதந்திரி மைக்கல் கோவிர்க்( சர்வதேச அனர்த்த குழுவில் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிர்க் உள்ளிட்டவர்களை விடுதலை செய்வதற்கு கனேடிய அரசாங்கம் காத்திரமான முனைப்புக்களை மேற்கொள்ளும் என்று இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவிற்கான கனேடிய தூதுவர் ஜோன் மெக்கலத்தை அராசங்கம் பணி நீக்கியது ஓர் ஆரோக்கியமான முயற்சி எனவும் இதன் ஊடாக இராஜதந்திர முரண்பாட்டு நிலைக்கு தீர்வு காணக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் இக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.