வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவும். காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையின் உண்மையையும் காட்டுவதற்காகவும் அம்பாறை தொடக்கம் யாழ்ப்பானம் வரையான கையெழுத்து பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்கள்..
சர்வதேசத்தின் 40 வது ஜெனிவா அமர்வில் தமக்கான நீதி கேட்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தாம் கூறும் தகவல்கள் யாவும் உண்மையென்பதை உணர்த்தவதற்காகவே இந்த கையொப்பம் சேரிக்கும் நடவடிக்கையை தொடர்ந்துள்ளார்கள். இதற்கு அணைத்து தமிழ் உறவுகளும். நலன் விரும்பிகளும் ஒத்துழைப்பு வழங்கியவண்ணம் உள்ளார்கள்..