வடக்கு மாகாணத்தில் இருந்த இராணுவம் அகற்றப்படும்போதே தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த முடியும் என்று ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட நிபுணர் பென் எமர்ஷன் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர் பயங்கரவாதத்தை ஒழிக்கும்போது மனித உரிமைகள் பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்ந்திருந்திருந்தாதனது பயணம் தொடர்பான அறிக்கையை அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடருக்காக பென் எமர்ஷன் சமர்ப்பித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
“இலங்கையில் விரைவாக பயங்கரவாதம் நீக்கப்பட்டு அதற்கு எதிராக உருவாக்கப்படுகின்ற புதிய சட்டம் சர்வதேச தரங்களுக்கு உட்பட்டவையாக காணப்பட வேண்டும்.
மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு அவர்களின் தண்டனைகள் குறித்த பொறிமுறையொன்று அவசியம்.
அதேபோன்று சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் தொடர்பில் ஆராய வேண்டும். அந்தவகையில் வடக்கிலிருந்து முழுமையாக இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்..ஆகையால் பாதுகாப்பு துறை முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியம்” என பென் எமர்ஷன் தெரிவித்துள்ளார்