ஏதிலிக் கோரிக்கையாளர் இருப்பிடங்களுக்காக மத்திய அரசாங்கம் 114 மில்லியன் டொலர் நிதியை, நகரசபை நிர்வாகங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஏதிலிக் கோரிக்கையாளர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கான இருப்பிட செலவுகளுக்காக இந்த நிதி பயன்படுத்திக் கொள்ளப்பட உள்ளது.
உரிய அனுமதி எதனையும் பெற்றுக்கொள்ளாது கனடாவிற்குள் பிரவேசிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதிகளவான ஏதிலிக் கோரிக்கையாளர்கள் கனடா நோக்கிப் படையெடுப்பதனால் மாகாண மற்றும் நகர நிர்வாகங்கள் சமூக சேவைகளையும் இருப்பிட வசதிகளையும் செய்து கொடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது.