இலங்கையின் 71ஆவது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளை கரிநாளாக நினைவு கொள்ளவிருப்பதாக, கேப்பாப்புலவு நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்
“எங்கள் தாய்நிலம் எங்களுக்கு வேண்டும் என்றும் எங்கள் நிலத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்றும் நோக்கோடு, எங்கள் நிலத்தை கேட்டு, இலங்கையின் இரண்டு சுதந்திர தினத்தை சந்தித்த, சுதந்திரமில்லாத மக்களாக நாம் இந்த மண்ணில் வீதியோரத்தில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்.
இம்முறை இலங்கையின் சுதந்திர நாளை துக்கநாளாக, கருப்பு பட்டி அணிந்து நினைவு கொள்ளவிருக்கிறோம். இது எங்கள் துக்கநாள். எங்கள் மண்ணில், எங்கள் வீடுகளில், எங்கள் பொருளாதாரத்தை வைத்து எப்போது வாழ்கின்றோமோ அன்றுதான் எங்களுக்கு சுதந்திர நாளெனவும் குறிப்பிட்டார்.