என்.டி.பி. கட்சியின் ஆதரவாளர்கள் இம்முறை தேர்தலின் போது பசுமைக் கட்சியின் பால் அதிக ஈர்ப்பினை காட்டுவார்கள் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் தோமஸ் முல்கெயர் தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சியும் கொன்சர்வேட்டிவ் கட்சியும் சுற்றுச் சூழல் பிரச்சினைகள் குறித்து எவ்வித கரிசனையும் கொண்டிருக்கவில்லை எனவும், இதனால் பசுமைக் கட்சியின் மீது நன்மதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டின் இறுதிக் காலாண்டு பகுதியில் பசுமைக் கட்சி மீதான மக்களின் செல்வாக்கு அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பசுமைக் கட்சி இறுதிக் காலாண்டு பகுதியில் கட்சியின் சார்பில் 1.5 மில்லியன் டொலர்களை திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.