ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்தின் புதிய சுகாதார திட்டம் தொடர்பாக கசிய விடப்பட்ட ஆவணங்கள் குறித்து மாகாண எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளன.
சுப்பர் ஏஜன்சீ என்னும் சுகாதாரத் திட்டத்தை முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான அரசாங்கம் உத்தேச வரைவுத் திட்டமாக அறிமுகம் செய்தாலும் இந்த திட்டம் இறுதியாக்கப்பட்டது என்று மாகாண என்டீபி கட்சியின் தலைவி அன்றியா ஹோர்வாத் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறெனினும் குறித்த ஆவணங்கள் எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது பற்றியோ அல்லது இவற்றின் நம்பகத்தன்மை பற்றியோ ஆதாரங்களை என்.டி.பி கட்சி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்துறையின் பல்வேறு விடயங்கள் தனியார் துறையிடம் ஒப்படைக்கக் கூடிய வகையில் புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் கசிய விடப்பட்ட ஆவணம் இறுதிசெய்யப்பட்ட ஆவணம் அல்லவென்று மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்களை குழப்பத்திற்குள்ளாக்கும் வகையில் என்டீபியினர் கருத்துக்களை வெளியிட்டுவருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் நடைமுறையில் உள்ள திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்ட போதும், இதுவரை மக்கள் பெற்றுவந்த நலன்களை மக்கள் தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.