வெனிசுவேலாவின் அரசியல் நெருக்கடி உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கக் கூடுமென அந்நாட்டு அரசுத் தலைவர் நிகொலஸ் மடுறோ வெளியிட்ட எச்சரிக்கையை இடைக்காலத் தலைவர் என்று தம்மைப் பிரகடணம் செய்துள்ள நாடாளுமன்ற குழுத் தலைவர் ஹ{வான் குஐடோ நிராகரித்துள்ளார்.
உள்நாட்டுப் போர் ஏற்படுமென்ற எச்சரிக்கை மடுறோவின் கற்பனையென அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் சுமார் அரைப்பங்கானவை, குஐடோவை இடைக்கால தலைவராக அங்கீகரிப்பதாக அறிவித்த நிலையில் மடுறோவின் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.