மொன்ரியலில் தட்டம்மை நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக மாகாண பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு தட்டம்மை நோய்த் தொற்றினால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக, வைரஸ் தொற்று ஏனையோரையும் தாக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் இரண்டு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்றுக்கொண்டவர்கள் தட்டமையினால் பாதிக்கப்பட்டிருந்ததாகத்
கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி பிராங்பேர்ட் மற்றும் ரொரன்டோ பியர்சன் விமான நிலையங்களின் ஊடாக பயணித்த பெண் ஒருவருக்கு தட்டம்மை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இவருக்கு போலந்தில் இந்த தொற்று பரவியிருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.ஸ
குறித்த பெண் கடந்த ஜனவரி மாதம் 28 மற்றும் 30ம் திகதிகளில் மொன்டரயலல் உள்ள இரண்டு மருத்துவ நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார்.
தட்டம்மை நோயைக் கட்டுப்படுவதற்கான சிறந்த வழிமுறை தடுப்பூசி ஏற்றிக் கொள்வது என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர் ஒருவரின் உதவியை நாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.