ரொறன்றோவில் இரண்டு தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்ததாக ஏற்றுக் கொண்டுள்ள புறூஸ் மக்காதருக்கான தண்டனையை முடிவு செய்யும் நீதிமன்ற அமர்வின் இரண்டாம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது.
இதன் போது மக்காத்தருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையுடன் 50 ஆண்டுகள் பிணைகோரி விண்ணப்பிக்க முடியாத தீர்ப்புக் குறித்தும் நீதிமன்றில் இன்று வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இந்தப் படுகொலைகள் இலங்கையில் அடிக்கடி நடைபெறும் கொலைச் சம்பவங்களை நினைவூட்டுகின்றன என்று கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான சன்சீ கப்பல்; ஏதிலியான கிருஷ்ணா கனகரட்னத்துடன் கனடா வந்த ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் இச்சம்பவங்கள் ஏதிலிகளுக்கு இந்த உலகில் எங்குமே பாதுகாப்பு கிடையாது என்பதை உணர்த்துவதாக அவர் விசனம் வெளியிட்டார்.
மக்காதரை சிறையில் அடைக்கும் நீதிமன்ற அமர்வு எதி;ர்வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.





