பெண்களின் அபிவிருத்தி மற்றும் பலத்துக்கான முன்முயற்சி என திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை அமல் செய்யும் பொறுப்பு தன் மகள் மற்றும் அரசு ஆலோசகரான இவங்கா கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
W GDP என்றழைக்கப்படும் இத்திட்டத்தின்படி முதல் களப்பணி நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு திட்டம் துவக்கப்படும். மற்றொரு திட்டம் அகில இந்திய அளவில் அமெரிக்க வங்கி ஒன்றின் துணையோடு மேற்கொள்ளப்படும்.
மேற்கு வங்கத்தில் இத்திட்டத்தை அமல் செய்வதற்கு பெப்சி கம்பெனி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க பெண் தொழில்முனைவோரின் பொருள்களை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த பெப்சி நிறுவனத்தின் வேளாண் பொருள் விற்பனை அமைப்பு உதவ திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது திட்டம், அமெரிக்க வங்கியான இண்டஸ்இன்ட் இந்த வங்கியின் கிளைகள் பெண் தொழில்முனைவோருக்கு குறும் முதலீட்டுக் கடன் வழங்க 10 கோடி டாலரை அமெரிக்க தனியார் முதலீட்டு கார்ப்பரேஷன் கடனாக வழங்கும்.
இந்த 10 கோடி டாலர் மூலதனத்தை அடிப்படையாக வைத்து இந்தியாவிலுள்ள குறு முதலீட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பெண் தொழில்முனைவோருக்கு இண்டஸ்இன்ட் இந்த வங்கி கடன் வழங்கும்.
இந்நிறுவனத்தில் கடன் பெறும் பெண் தொழில்முனைவோர் தங்கள் பொருள்களை ஆபிரிக்கா ஆசியா மத்திய அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதுதான் லட்சியம் என்று டிரம்ப் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள பெண் தொழில் முனைவோர் பயன்பெறுவதற்காக பெண்கள் உரிமைகள் தொடர்பான We Rise என்ற அமைப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை உருவாக்க உள்ளது. மேலும் தேவையான நிதி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நிதியம் ஒன்றை W GDP துவக்கும். அதன் ஆரம்ப மூலதனம் 5 கோடி டாலராக இருக்கும்.
வளரும் நாடுகளில் 5 கோடி பெண் தொழில்முனைவோருக்கு 2025-ஆம் ஆண்டுக்குள் சுயசார்பு நிலையை எட்டுவதற்கு உதவ வேண்டும் என்பது எங்களின் லட்சியம் என்று டிரம்ப் கூறினார்.
பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் கிடைத்தால் அவரவர் சொந்த நாடுகளில் உள்ள அவர்கள் குடும்பங்கள் சுயசார்பு உடையவைகளாக வலுப்பெறும் அதன் விளைவாக வளரும் நாடுகள் சுயசார்பு நிலையை அடையமுடியும். ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் உள்ள குடும்பங்களும் சுய சார்பு நிலைக்கு முன்னேற்றம் அடையும். இந்த மாற்றம் காரணமாக உலக நாடுகளில் அமைதி மற்றும் வளம் பெருகும்.
இதுதான் எங்கள் தேசிய பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையாக அமைந்துள்ளது. உலக அளவில் பெண்கள் பொருளாதார சுயசார்பு அதிகாரம் பெறும்பொழுது உலகப் பொருளாதாரமும் கணிசமாக வளர்ச்சியடையும் என்று டிரம்பின் மகள் இவங்கா தெரிவித்தார்.
உலகப் பொருளாதார மதிப்பு 12 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும் என்று அவர் உறுதியாகக் கூறினார்