யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பல்கலைக்கழக நான்காம் ஆண்டு மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனின் தலைப் பகுதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





