காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களை அமல்படுத்துவதற்கு சில அரசியல் கட்சிகள் தடை ஏற்படுத்தி வருவது கவலை அளிக்கிறது என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஒன்டாரியோவின் சட்பெரியில்(ளுரnடிநசல) முன்னெடுக்கப்பட்டுவரும் உட்கட்டுமான அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சஸ்கட்ச்வான் மற்றும் ஒன்டாரியோ ஆகிய மாகாணங்களை ஆட்சி செய்யும் முதல்வர்கள் காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கத்தின் திட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர் என அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கனடிய மக்களின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் ஆரோக்கியமான மாற்றத்தை எதிர்க்கும் வகையில் முதல்வர் டக் போர்ட் உள்ளிட்ட சில தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர் என்றும் பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்.