ஓட்டிசம் எனப்படும் மன இறுக்க நோய் சிகிச்சை முறைமை தொடர்பில் வெளியிட்ட கருத்து ஏதேனும் வகையில் யாரையும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாக ஒன்டாரியோவின் சமூக சேவைகள் அமைச்சர் லீசா மெக்லார்ட் தெரிவித்துள்ளார்.
ஓட்டிசத்துக்கான சிகிச்சை தொடர்பிலான புதிய திட்டத்திற்கு ஆதரவளிக்காதோர் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடலாம் என்று அமைச்சர் லீசா டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் எச்சரித்திருந்தார்.
இந்த டுவிடடர்; பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமது டுவிடடர்; பதிவு யாரையேனும் அச்சுறுத்தும் வகையிலோ அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ அமைந்திருந்தால் அதற்காக வருந்துவதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மற்றுமொரு டுவிட்டர் பதிவில் லீசா தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட 23000 ஓட்டிசத்தால்; பாதிக்கப்பட்ட சிறார்களின் நலனை முதனிலை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.