கனடாவில் பூர்வகுடியின மக்களின் வங்கி நிதியியல் செயற்பாடுகள் முன்னொருபோதும் இல்லாத வகையில் பாரியளவில் அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
பூர்வகுடியின மக்கள் சமூகத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் வங்கி வைப்புக்களைப் போன்றே வங்கிக் கடன் பெறுகைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களைப் போன்று அல்லது பூர்வகுடியின மக்கள் வங்கிக் கடன்களை கோரும் காரணங்கள் மற்றும் கடன் தொகை அளவு வெகுவாக அதிகரித்துள்ளது என கனேடிய றோயல் வங்கியின் பூர்வகுடியின வங்கி விவகார பணிப்பாளர் னுயடந ளுவரசபநள தெரிவித்துள்ளார்.
றோயல் கனேடிய வங்கியில் பழங்குடியின மக்களின் வங்கி வைப்புக்கள் மற்றும் கடன் பெறுகைகள் என்பன ஓராண்டுக்குள் பதினெட்டு வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் இவ்வாறு அதிகளவு கடன்கள் பெற்றுக்கொள்ள பழங்குடியின சமூகத்தினர் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.