காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் தொடர்பில் புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 46 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி காலையில் பிரதமர் மோடி தலைமையில் கூடடம் நடத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய அமைச்சர்களான அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதுடன், காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்தும் அங்கு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்கொலை தாக்குதலுக்கு எவ்வாறான பதிலடி கொடுப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காஷ்மீர் தாக்குதலையடுத்து பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களது அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று இரத்து செய்யப்பட்டன.