பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே தனது எதிர்பார்ப்பு என வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் விஜயம் மேற்கொண்டார்.
இதன் போது அங்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆளுனர் சுரேன் ராகவன் ஆசிபெற்றார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் சமமாக வாழவேண்டிய நாட்டை உருவாக்குவதற்கு சகலரதும் பங்களிப்பு அவசியம் எனவும் குறிப்பாக பௌத்த பிக்குக்கள், மத குருமாரின் பங்களிப்புக்கள் அவசியம் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.