இலங்கையில் மனித உரிமைகள், மீளிணக்கம் என்பன தொடர்பான நடவடிக்கைளில் நெருங்கிப் பணியாற்றுவதற்கு இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணங்கியுள்ளன.
நேற்;று பிறஸல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய இல்ஙகை கூட்டு ஆணைக்குழுவின் 22 ஆவது கூட்டத்தின்போது இந்த விடயங்கள் குறித்து முக்கியமாகப் பேசப்பட்டதாக கூட்டு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, சர்வதேச தராதரத்திலான சட்டம் ஒன்றின் மூலம் அது பதிலீடு செய்யப்படவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது.
ஜீஎஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்காக வழங்கிய உறுதிமொழிப்படி மனித உரிமைகள் உட்பட்ட 27 சர்வதேச சாசனங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இல்ஙகை உறுதியளித்தது.
2015 ஆம் ஆண்டு ஒக்ரோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவது குறித்தும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. பொருளாதாரம், பாதுகாப்பு என்பன தொடர்பாகவும் பேச்சுக்களில் ஆராயப்பட்டது.





