உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? உடனடியாக கழிவறை அல்லது தரை என்று கூறுவீர்கள். ஆனால், இந்த விடை சரியல்ல.
பாத்திரம் துலக்கும் பஞ்சு அல்லது துணிதான் உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான பொருளாகும் என அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
பாத்திரங்களை சுத்தப்படுத்தும் துணிகள் பொதுவாக பல பாக்டீரியாக்களின் தாயகமாகி விடுகின்றன.
இந்த துணிகள் வெதுவெதுப்பாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதால், கிருமிகள் வளர்வதற்கு சிறந்த சூழ்நிலை அவற்றில் உள்ளதே இதற்கு காரணமாகும்.
கழிவறை இருக்கையில் ஒரு சதுர அங்குல (6.5 சதுர சென்டிமீட்டர்) இடத்தில் 50 பாக்டீரியாக்களே இருக்கின்றன.
ஆனால், சமையலறை பஞ்சில் ஒரு சதுர அங்குல இடத்தில் 10 மில்லியன் மற்றும் பாத்திரம் கழுவும் துணியில் ஒரு மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன.
வேறு சொற்களில் கூறினால், உங்களுடைய சமையலறை பஞ்சு உங்கள் கழிவறையின் இருக்கையைவிட இரண்டு லட்சம் முறை அதிக அழுக்கானதாக இருக்கும்.
எனவே, உங்களுடைய பாத்திரம் கழுவும் துணிகள் அல்லது பஞ்சை நன்றாக உலரும் வகையில் வைத்து கொள்வது மிகவும் சிறந்தது.
சமையலறை பஞ்சுகளை சுத்தம் செய்வது பற்றி “குட் ஹெஸ்கீப்பிங்” சஞ்சிகையும் சில குறிப்புக்களை வழங்கியுள்ளது.
இந்த பஞ்சையும், துணியையும் நுண்ணலை அடுப்பு அல்லது பாத்திரம் கழுவும் இயந்திரத்திலும் ஒட்டி வைத்து கிருமிகளை அழித்துவிடலாம்.
மேலும், இறைச்சிக்கு ஒன்றும், பிற பயன்பாட்டுக்கு வேறொன்றும் என தனித்தனியாக வைத்திருப்பதும் நன்றாக இருக்கும்.
மரத்தால் செய்யப்பட்ட வெட்டும் பலகைகள் சுத்தம் செய்வதற்கு எளிதானவை.
மிக நன்றாக சுத்தம் செய்வதற்கு பாத்திரம் சுத்தம் செய்யும் வினிகரை அசிட்டிக் அமிலமாக பயன்படுத்துவது கிருமி அசுத்தத்தை போக்குவதற்கு சிறந்த வழியாகும்.