எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அண்மைக்காலமாக அரசியல்ச் செயற்பாட்டின் விருப்பத்தை வெளியிட்டுவரும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சட்டமன்றத் தேர்தலே எங்களது இலக்கு எனவும் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையி;ல் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. ரஜினி மன்றத்தின் கொடி, படம், பெயரை எந்த கட்சிக்கும் ஆதரவாக பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவர்களுக்கு சிந்தித்து வாக்களியுங்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.