முள்ளிவாய்க்கால் தமிழின இனப்படுகொலையின் 10-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஒருமித்து நினைவுகூறப்பட வேண்டும் என்று வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுத ரீதியிலான 30 ஆண்டுகால போர் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் பூர்த்தியாகின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுகூறலை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கான சர்வதேச நீதி விசாரணை தேவை என்பதை வலியுறுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை மீண்டும் ஒரு தடவை வலியுறுத்துவோம் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.