யேமனின் ஹூதாயத்(Hodeidah) துறைமுகத்திலிருந்து தங்களது படையினரை அகற்றிக் கொள்வதற்கு யேமன் அரசாங்கமும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களும் இணங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் துறைமுகப் பகுதியிலிருந்து படையினரை அகற்றிக் கொள்வதற்கு இணங்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் எப்பொழுது படையினரை மீளப் பெற்றுக்கொள்வது என்பது பற்றிய திகதிகள் இதுவரை யில் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
யேமன் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையமாக துறைமுகம் காணப்படுகின்றது.
முதல் கட்டமாக படையினர் அகற்றிக் கொள்ளப்பட உள்ளதாகவும் பின்னர் யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யேமனில் இடம்பெற்று வரும் போர் காரணமாக 6800 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 10700 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.